கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு தடுப்பூசி…!!
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும் ஊசி மருந்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் பபா பலியவடன தெரிவித்துள்ளார்.
11 வயது பூர்த்தியான அனைத்து பெண் பிள்ளைகளுக்கும் இந்த மருந்து வழங்கப்படவுள்ளதுடன், சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் சிறுமிகளுக்கு மருந்து செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய மறுவலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் இலவசமாக இந்த ஊசி மருந்து வழங்கப்பட உள்ளது.
மருந்து வழங்கப்பட்டு ஆறு மாதங்களில் மீண்டும் இந்த ஊசி மருந்து வழங்கப்படும். இந்த ஊசி மருந்து கர்ப்பப்பை புற்று நோயை ஏற்படுத்தும் ஹியுமன் பெசிலோமா வைரசுக்கு எதிராக செயற்படும்.
கர்ப்பப்பை வாய்புற்று நோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பெண்கள் வருடந்தோறும் அடையாளம் காணப்படுகின்றனர்.
நோய் முற்றிய நிலைலேயே இவர்களில் பலர் சிகிச்சைக்காக வருகின்றனர் எனவும் பலியவடன குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பப்பை வாய் புற்றோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்தை வழங்க சுகாதார அமைச்சு ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடுகிறது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளாது.