பாடசாலை மாணவி மாயம்…!!
16 வயது மாணவி ஒருவரை காணவில்லை எனும் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் நேற்று காலை பாடசாலைக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை எனும் பெற்றோரின் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
காத்தான்குடியைச் சேர்ந்த குறித்த மாணவி 16 வயதுடையவர் எனவும், மாணவி வழமை போன்று பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பவில்லை என்றும் பெற்றோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த மாணவி திங்கட்கிழமை பாடசாலைக்குச் சமுகமளிக்கவில்லை என பாடசாலை தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் காத்தான் குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.