76 வயது மனைவியை தடியால் அடித்துக் கொன்ற 82 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை…!!
மராட்டிய மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள தலேகான் கிராமத்தை சேர்ந்தவர் தாதிராம் அர்ஜுன் உகாலே(82). இவரது மனைவி கீதாபாய் உகாலே(76). நேற்று இந்த தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட வாய்தகராறால் ஆத்திரம் அடைந்த தாதிராம், நேற்றிரவு கீதாபாய் நன்றாக தூங்கி கொண்டிருந்தபோது தடிக்கம்பால் அவரை அடித்துக் கொன்றார்.
பின்னர், மனமுடைந்த நிலையில் தனது பண்ணை வீட்டுக்கு சென்ற அவர், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரு பிரேதங்களையும் கைப்பற்றியுள்ள போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.