பாரிய வாகன விபத்து – இருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில்…!!
கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின், புனானை பகுதியில் இடம் பெற்ற பாரிய வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நிந்தவூரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேரூந்தும், கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி கோழிகளை ஏற்றி வந்த வாகனமும் நேருக்கு நேர் மோதியே இந்த பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வாழைச்சேனை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான பேரூந்து பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக, விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.