11 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு…!!
நாளைய தினம் நண்பகல் 12 மணயில் இருந்து நள்ளிரவு 12 மணி வரையில் 11 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள பிரதேசங்களான மஹரகம,மலபே,கோட்டை ஆகிய பகுதிகளில் நீர்விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கள் சபை குறிப்பிட்டுள்ளது.
சில திருத்தப்பணிகள் மேற்கொள்ள இருப்பதனாலேயே நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைபகுதி, பத்தரமுல்லை, கொஸ்வத்த, தலவத்துக்கொட, மலபே, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்படும் என தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.