முறைப்பாடுகளை பதிவு செய்ய வட்ஸ் அப் மற்றும் வைபர் முறைகள்
இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக சிறுவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகளை 077 322 00 32 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கமுடியும்.
மேலும், தொலைபேசி இலக்கத்திற்கு மேலதிகமாக குறுந்தகவல், வட்ஸ் அப் அல்லது வைபர் மூலமோ தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சிறுவர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்றுமுதல் ஆகஸ்ட் 22 ஆம் திகதிவரை இந்த முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அதிகார சபையின் தலைவர் நட்டாஷா பாலேந்திரா தெரிவித்துள்ளார்.