கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை…!!
கம்பஹா மினுவங்கொடை பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்படட மோதலின் போது இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி ஹெவாஹெட்ட பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான நபரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மினுவங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.