சாலை விபத்தில் சாகாத உயிர்வரம் வேண்டுமா?: ஆஸ்திரேலிய ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு – வீடியோ…!!

Read Time:2 Minute, 38 Second

201607221602556957_Graham--has-the-body-you-need-but-certainly-not-the-face_SECVPFஉலகம் முழுவதும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவரும் நிலையில் சாலை விபத்தால் பாதிக்காதபடி ஒரு மனிதனின் உடலமைப்பு இருக்க வேண்டுமானால் அந்த மனிதனின் உடல்வாகு எப்படி இருக்க வேண்டும்? என்பதை ஆஸ்திரேலியா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவரும் நிலையில் சாலை விபத்தால் பாதிக்காதபடி ஒரு மனிதனின் உடலமைப்பு இருக்க வேண்டுமானால் அந்த மனிதனின் உடல்வாகு எப்படி இருக்க வேண்டும்? என்பதை ஆஸ்திரேலியா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மெல்போர்ன் நகரை சேர்ந்த பிரபல ஓவியர் பாட்ரிசியா பிக்கினினி-யின் கற்பனையில் பிரபல அறுவை சிகிச்சை நிபுணரால் ‘பைபர் கிளாஸ்’ உலோகத்தால் செய்யப்பட்டுள்ள இந்த மனித உடலானது, உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை எவ்வித ஆபத்தான விபத்தையும் தாங்கி உயிர்வாழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் நகரில் உள்ள ஸ்டேட் லைப்ரரி ஆப் விக்டோரியாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக ‘கிரஹம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ‘மாதிரி மனிதர்’ தற்போது காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதிக்கு பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல நகரங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ள கிரஹம் நமக்கு கூறும் அறிவுரை என்ன தெரியுமா?

’என்னைப் போன்ற உடல்வாகு உங்களிடம் இல்லை, கவனமாக வாகனங்களை ஓட்டுங்கள் – என்னைப் போன்ற உடலமைப்பு உங்களுக்கு தேவைப்படாது’ என்பதே இவரது சாலை விழிப்புணர்வுக்கான தாரக மந்திரமாக உள்ளது.

கிரஹம்மின் உடல்வாகை நாமும் ஒருமுறை சுற்றிப்பார்க்க..,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகத்துல இருக்குற அறிவாளியெல்லாம் நம்ம நாட்டுல தான் இருக்காங்கப்பா…!! வீடியோ
Next post குழந்தை வளர்ப்பில் அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா?