குழந்தை வளர்ப்பில் அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா?

Read Time:3 Minute, 50 Second

baby_handing_002.w540குடும்பத்தில் அம்மாவிடம் கூடுதல் பாசத்தோடு ஒட்டிக் கொண்டிருப்பார்கள். அப்பா வேலை, பொருளாதார பொறுப்பு என பிஸியாக இருப்பதால் குழந்தைகள் அவரிடம் சேர்ந்து கழியும் நேரங்கள் மிகக் குறைவு.

அதனால் குழந்தை எப்படி நடந்தாலும் அம்மாவை குறை சொல்லி, அவர் மேல் பழி போட்டு தப்பித்துக் கொள்வார்கள் அப்பாக்கள்.

ஆனால் உண்மையென்னவென்றால் குழந்தைகள் கூடவே இல்லாவிட்டாலும், அப்பாவின் செயல்கள் குழந்தை உற்று கவனித்துக் கொண்டுதானிருக்கும். அவர்களின் செயல்கள் குழந்தைகளை பாதிக்கும் என்று ஆய்வு கூறுகின்றது.

இந்த ஆய்வு குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் குழந்தைப்பருவ ஆராய்ச்சி செய்யும் இரு விதமான ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளது.

குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும், நல்ல எண்ணங்களைப் பெறுவதற்கும் அப்பாவின் உறுதுணை குழந்தைப் பருவத்தில் மிக அவசியம் என்று போதுமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

2-3 வயதான குழந்தைகளுக்கு அம்மாவின் அரவணைப்பு இருந்தாலும், அப்பா குழந்தைகளிடம் நடக்கும் விதங்கள் மனதளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றனர். அப்பா, குழந்தையிடம் பொறுமையில்லாமல் எரிந்து விடுவது, சரியாக வளர்க்க தெரியாமல், டென்ஷன் பட்டுகொண்டிருப்பது ஆகியவை எதிர்மறை விளைவுகளை குழந்தைகளிடம் ஏற்படுத்தும்.

குறிப்பாக பெண் குழந்தைகளை விட, ஆண்குழந்தைகளுக்கு அப்பாவின் நடவடிக்கைகளால் கவரப்படுவார்கள். அதேபோல், குழந்தையை வளர்க்கும்போது உண்டாகும் பெற்றோர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், டென்ஷன் கூட குழந்தைகளை பாதிக்கிறது. குழந்தைகள் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், அவை மனதளவில் பாதிக்கிறது என்று இந்த ஆய்வு கூறுகின்றது.

குழந்தைகளின் வளர்ப்பில் தந்தையின் பங்கு இல்லை. அதனால் அவர்களின் வளர்ச்சி தந்தையால் பாதிக்காது என்று முந்தைய காலங்களில் சொல்லி வந்தனர். ஆனால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தந்தையின் குணங்களுக்கும், குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் நேரடி தொடர்பிருக்கிறது. அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும்.

சுமார் 730 குடும்பங்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் காண்பிக்கும் கோபம், மன அழுத்தம் எவ்வாறு குழந்தைகளை பாதிக்கிறது என்று ஆய்வை ஆரம்பித்தனர்.

அப்பாக்களின் குணங்கள், மன நலங்கள் நிச்சயம் குழந்தைகளின் மனதில் விதையை தூவும். வளர்ந்தவுடன் அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அவர்களின் தந்தையை பொறுத்தான் அமையும் என்று ஆய்வின் இறுதியில் சொல்கின்றனர் ஆய்வாளர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாலை விபத்தில் சாகாத உயிர்வரம் வேண்டுமா?: ஆஸ்திரேலிய ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு – வீடியோ…!!
Next post ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா…!!