அலட்சியமான சேவையால் பெண்மணிக்கு நேர்ந்த அவலம்…!! வீடியோ
இன்றைய நகரமயமாக்கலின் விளைவாக திரும்பும் இடமெல்லாம் குப்பை, கூழங்களாகவே இருக்கின்றது. இதனால் அவற்றினை அப்புறப்படுத்துவதற்கு விசேட வாகனங்கள் அனுப்பப்படுவதுண்டு.
எனினும் இவ்வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் தமது சேவையை முறையாக செய்வது இல்லை. இதனால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது. அதே போன்றே தாய்வானிலும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதாவது வீதியில் செல்லும் குறித்த குப்பை அப்புறப்படுத்தும் வான் நிறுத்தாமலேயே செல்லும். குப்பை போட விரும்புவர்கள் வாகனத்தை குறி பார்த்து அதனுள் எறிந்தால் மட்டுமே உண்டு. அவ்வாறு ஒரு பெண் குறிபார்த்து எறிய வாகனத்திற்கு பின்னால் ஓடியதில் வீதியில் முகம் அடிபட்டு விழுந்துள்ளார்.