பஸ் கட்டண பட்டியல் வெளியீடு…!!
மீளாய்வு செய்யப்பட்ட பஸ் கட்டண பட்டியல் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளத.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வீதிகளுக்குமான பஸ் கட்டணங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ. ஹேமசந்திர குறிப்பிட்டார்.
இதன் கீழ், அதிவேக வீதிகளுக்கான பஸ் கட்டணம் குறிப்பிட்ட வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.