உரப்பையில் உடும்புகளை கடத்தியவர் கைது…!!
திருகோணமலை – அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு உடும்புகளை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற நபரை நேற்று (22) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அக்போபுர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே அக்போபுர பொலிஸாரினால் கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் அக்போபுர, கித்துல்ஊற்று பகுதியில் இருந்து உடும்புகளை உரப்பையினுள் இட்டு பேரமடுவ பகுதிக்கு துவிச்சக்கர வண்டியில் கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போதே போக்குவரத்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று (23) ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளார்.