சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்…!!
தங்காலை – பரவிவெல்ல கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சடலமாக மீட்கப்பட்ட பெண் யார் என்பது இதுவரையும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம் காண்பதற்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.