ஜெர்மனி துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி, மர்ம நபர் தற்கொலை, ஐ.எஸ். அமைப்பு மகிழ்ச்சி கொண்டாட்டம்…!!

Read Time:4 Minute, 42 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)ஜெர்மனியின் முனிச் நகரில் நேற்றிரவு மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதோடு 21 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ள நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸ் உயரதிகாரி ஹ_பர்டஸ் ஹென்டிரே விளக்கமளிக்கையில்,

வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தாக்குதல் நடத்தியவனும் ஒருவன். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் 18 வயதான ஜெர்மன்-ஈரானை சேர்ந்தவர். இந்த தாக்குதலுக்கான நோக்கம் என்னவென்று சரியாக தெரியவில்லை.

வணிக வளாகத்திற்குள் நுழைவதற்கு முன் மெக்டனோல்ட் உணவு விடுதியில் அவர் தாக்குதல் நடத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலை அடுத்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

தற்கொலை

ஜெர்மனி நாட்டில், முனிச் நகரில் அமைந்துள்ள ஒலிம்பியா வணிக வளாகத்தில் புகுந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இச்சம்பவத்தில் 9 பேர் பலியானதாகவும், துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டவன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக இத்தாக்குதலில் குறைந்தபட்சம் மூன்று பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர், ஜெர்மனில் முனிச் நகரில் வசித்த இரான் வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், 18 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்

ஐ.எஸ். அமைப்பு மகிழ்ச்சி

முனிச் தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ள நிலையில், ஐஎ.ஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மகிழச்சி தெரிவித்து வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் கருத்துக்களையும், வாசகங்களையும் சமூக வலைதளங்களில் ஐஎஸ் அமைப்பினர் பதிவிட்டு வருகின்றனர்.

அதில் ஒரு டுவிட்டர் பதிவில், கடவுளுக்கு நன்றி. ஐஎஸ் அமைப்பிற்கு வளம் சேர்த்ததற்காக கடவுளுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு பதிவில், ஐரோப்பாவிலும் ஐஎஸ் இயக்கம் விரிவடைந்து வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரபு மொழியில் பதிவிடப்பட்டுள்ளன.

இதற்கு முன் சமீபத்தில் நடந்த பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் தாக்குதல்களின் போதும் அவற்றை கொண்டாடும் விதமாக இது போன்ற கருத்துக்களை ஐஎஸ் அமைப்பினர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்…!!
Next post வவுனியாவில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மாணவனின் சடலம்..!!