உயிர் காக்கும் வேப்பிலை எதற்கு உபயோகப்படுத்தலாம்?

Read Time:3 Minute, 19 Second

neem-23-1469262705வேப்ப மரம் மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும் , அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியை மக்கள் பெறுவார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு பெருகக் கூடியது. வயிற்று பிரச்சனைகளை தீர்க்கக் கூடியது. புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றலை பெற்றது. கிருமிகளை அழிக்கும் சக்தி பெற்றது.

வயிற்றுப் பூச்சிகளை அழிக்க:

வயிற்றில் பூச்சி இருந்தால் தினமும் வேப்பம் பழத்தை சாப்பிடுங்கள். பூச்சிகள் வெளியேறிவிடும்.

வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்தத்தால் வரும் மயக்கம் குணமாகிவிடும். வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். நோயெதிர்ப்பு செல்கள் அதிகரிக்கும்.

மலேரியாவை குணப்படுத்தும் : வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.

சர்க்கரைவியாதியை கட்டுக்குள் கொண்டுவர தினமும் வேப்பங்க்காயை சாப்பிட்டு வாருங்கள். மாத்திரையின்றி கட்டுக்குள் கொண்டு வரலாம்.

சரும வியாதிகளுக்கு:

வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரையை சேர்த்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் தீராத தொழுநோய் முதலான அனைத்து சரும வியாதிகளும் குணம்டையும்.

மூல நோய்க்கு:

3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும் பற்கள் உறுதி பெற: ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பது நூறுசதவீத உண்மை. வேப்பங்குச்சியால் பல்விளக்கினால், பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தபட்ட நோய்கள் அண்டாது.

பாத வெடிப்பு:

வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்று போட்டால் குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அலட்சியமான சேவையால் பெண்மணிக்கு நேர்ந்த அவலம்…!! வீடியோ
Next post சுவரில் ஏறமுடியாத ஆண் காவலரை தூக்கிவிட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர்…!!