சென்னை பெரம்பூரில் விஷ வாயு தாக்கி மூன்று பேர் உயிரிழப்பு…!!
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே ஒரு தனியார் ஓட்டலில் இன்று கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தொட்டிக்குள் இறங்கி ஊழியர்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது திடீரென விஷவாயு பரவியது. இதை சுவாசித்த சதீஷ், ராமகிருஷ்ணன், வினய் ஆகிய தொழிலாளர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
இதுபற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இறந்ததால் அந்த ஓட்டலில் வேலை பார்த்த தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இவ்விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.