மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி…!!
இரத்தினபுரி – காவத்தை பிரதான விதியின் பெல்மதுளை கொடகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக காவத்தை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவத்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.