வலி வடகில் விடுவிக்கப்படக்கூடிய எஞ்சியுள்ள காணிகள் தொடர்பில் மீளாய்வு…!!
வலி வடகில் விடுவிக்கப்படக்கூடிய எஞ்சியுள்ள காணிகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
பலாலி இராணுவ படைத்தலத்தில் இதற்கான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இராணுவ கட்டளை தளபதி மற்றும் கடற்படையினரும் இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது வலிவடக்கில் எஞ்சியுள்ள காணிகளில் மக்களை விரைவில் மீள்குடியேற்றக்கூடிய பகுதிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி கூறியுள்ளார்.
பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளை மக்களின் மீள்குடியேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது, எந்த பகுதிகளை விடுவிப்பது போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், கீரிமலை மீன்பிடி தளம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மீள்கிடிறே்ற அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி குறிப்பிட்டுள்ளார்.