குழாயில் பெண்ணின் சடலம்: அமெரிக்க பிரஜைக்கு சவூதியில் சிறைத்தண்டனை..!!
சவூதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த தனது மனைவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய அமெரிக்க பிரஜைக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை, குறித்த பெண்ணின் கணவர் பணியாற்றிய பெட்ரேலிய தொழிற்சாலை ஒன்றின் குழாயில் காணப்பட்ட நிலையில், மீட்கப்பட்டதாக சவுதி பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீட்கப்படுவதற்கு 8 மாதங்களுக்கு முன்னர், இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக சட்ட வைத்திய பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அமெரிக்க பிரஜை தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதனையடுத்து அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
பெண்ணின் சடலத்தை அந்த பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களே மீட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating