ஆப்கானிஸ்தானில் வன்முறை தாக்குதல்களுக்கு 6 மாதங்களில் 1600 பொதுமக்கள் பலி..!!

Read Time:1 Minute, 48 Second

201607251246523398_Afghan-civilian-casualties-1601-in-2016s-1st-half_SECVPFஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஆறுமாத காலத்தில் வன்முறை வெறியாட்டம் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் 1600-க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் நாளுக்குநாள் தீவிரவாத குழுக்களும், போராளி இயக்கங்களும் வெகுவாக பெருகி வருகின்றன. ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்பதுபோல் அரசுக்கு எதிராகவும் தங்களுக்குள்ளும் மோதிவரும் இந்த குழுக்கள் நாட்டின் பல பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல், தற்கொலைப்படை தாக்குதல் போன்றவற்றை நடத்தி வருகின்றன.

அவ்வகையில், இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களில் 1600-க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்த்கைகள் எனவும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது.

3500-க்கும் அதிகமானவர்கள் மேற்கண்ட தாக்குதல்களில் சிக்கி காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ள இந்த அறிக்கை இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட மிக அதிகமானது என்றும் கவலை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காலத்தின் தேவை…!!
Next post ஓடும் பஸ்சில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் எஸ்.ஐ. கைது..!!