மாரடைப்பை தடுக்கும் கிவி…!!

Read Time:5 Minute, 30 Second

kiwi-fruit-696x421உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில், உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளில், மருத்துவ பெட்டகம் என்று கிவி பழத்தைப் போற்றுகின்றனர்.

எம்முடைய நாட்டில் சீனாவிலிருந்து இறக்குமதிச் செய் யப்படும் இந்த பழம் தற்போது மூன்று வண்ணங்களிலும் கிடைக்கிறது.

கிவியா? அப்படியென்றால்? அதன் மருத்துவ குணம் என்ன? என அறிய ஆவலாக இருந்தால் தொடர்ந்து வாசிக்கவும்…

கிவி கனியில் கொழுப்புச் சத்து குறைவான அளவில் இருக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை உண்ணலாம்.

அத்துடன் இதில் விற்றமின் சி கூடுதலாக இருக்கிறது. அதனால் நோயை தடுக்கும் ஆற்றலை வழங்குகிறது,

அத்துடன் எம்முடைய உடலில் கட்டுப்பாடின்றித் திரியும் ரேடிக்கிள் தான் பலவகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் காரணமாக இருக்கின்றன.

கிவி இத்தகைய ரேடிக்களின் வன்செயலை அழித்து செல்கள் சிதைவதை தடுக்கிறது.

அத்துடன் முதுமைக் காலத்தில் ஏற்படும் கண் புரை, விழித்திரை சிதைவு ஆகியவற்றை ஏற்படாமல் காக்கிறது.

உடலில் பொட்டாஷியத்தின் அளவு குறைந்துவிட்டால் இதயத் துடிப்பில் சீரற்ற நிலை உருவாகும். கிவி கனியில் ஏராளமாக பொட்டாசியம் சத்து உள்ளதால் இதய துடிப்பை சீரான நிலையில் வைத்துக்கொள்ள பெரும் துணை புரிகிறது.

அத்துடன் மாரடைப்பிற்கு முன்னர், மகாதமனியில் உள்ள இரத்த குழாய்களில் உள்ள இரத்தத்தில் சிவப்பணுக்கள், தட்டகங் கள் இவையாவும் ஒன்று கூடி கட்டியாக மாறி, குழாயை அடைத்துக் கொண்டு தமனிகளில் இரத்தத்தை செல்லவிடாமல் தடுத்து விடுகின்றன.

இதனால் தான் மாரடைப்பே ஏற்படுகிறது. இந்நிலையில் கிவி கனியை தொடர்ந்து சாப்பிடுவோமானால், இரத்தக் குழாய்களில் கட்டிகளை ஏற்படுவதை இது முற்றிலுமாக தவிர்த்துவிடுகிறது.

அத்துடன் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவைப்படும் ஃபோலேவி என்ற சத்தும் இதில் உள்ளது.

ஒமேகா 3 என்ற கொழுப்பு அமில சத்தும் இதில் அதிகமுள்ளது. அதனால் வளரும் நிலையில் உள்ள குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு ஏற்ற கனியாக இது அமைந்தி ருக்கிறது.

அத்துடன் கிவியில் சர்க்கரை குறியீடின் அளவும் மிகக் குறைவாக உள்ளதால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை மற்ற கனிகளைப் போல் விரைவாக அதிக மாக்காமல் கொஞ்சமாக நிலையாக நிலை நிறுத்துவதால் சர்க்கரை நோயாளிகள் சாப் பிடும் பழமாகவும் இது திகழ்கிறது.

கிவியில் அளவுக்கதிகமாக நார்ச்சத்துகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால் மலச் சிக்கலை அகற்ற இது பேருதவிப் புரிகிறது.

இதிலுள்ள விற்றமின் ஈ, பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் பாது காப்பதுடன் மிகவும் எளிதாக கருவுறும் தன்மையையும் உருவாக்குகின்றது.

ஓஸ்துமா மற்றும் மூச்சு திணறல் உள்ளவர்களுக்கு இந்த கனி சிறந்த உணவாகவே செயல்படுகிறது. ஏனெனில் இவை நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்கிறது.

ஒரு மனிதன் நலமாக வாழவேண்டும் என்றால் அவனுக்கு குறைந்தபட்சம் ஒன்பது சத்துக்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனைப் பெற மனிதன் பல்வேறு வகையான உணவுகளையும் உணவு வகை களையும் உட்கொள்கிறான்.

ஆனால் இந்த ஒன்பது சத்துக்களும் கிவியில் ஒருசேர அமைந்திருக்கிறது என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள்.

என்ன இனி தினந்தோறும் அல்லது கிடைக்கும் போதெல்லாம் கிவியை சாப்பிடுங்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகேஷ் அம்பானியின் மகன் 70 கிலோ நிறை குறைத்ததால்! ஏற்பட்ட நிலையைப் பாருங்கள்! வீடியோ..!!
Next post விந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்..!!