பாரிய வாகன விபத்து – பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் படுகாயம்..!!
பதுளை – பிங்அராவ பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பதுளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் உட்பட மேற்பார்வையாளர் ஒருவரும் படுகாயத்திற்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் மரம் ஒன்றில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் மேலதிக சிகிச்சை பெறுவதற்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.