By 27 July 2016 0 Comments

முன்று வகையான தலைவலி…!!

Headache-696x464தலை­வலி என்­பது ஒரு நோய் அறி­கு­றி­யாகும். எமது உடல் நோய்­வாய்ப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை தெரி­விக்கும் ஒரு சமிக்ஞை அறி­கு­றியே தலை­வ­லி­யாகும். இந்த சமிக்­ஞையின் பிர­காரம் உட­ன­டி­யாக சரி­யான சிகிச்­சையை பெற்­றுக்­கொள்­ளாமல் pain killers மாத்­தி­ரை­களை உட்­கொண்டு இச்­ச­மிக்­ஞையை முடக்­கி­வி­டு­கின்றோம்.

இதன் போது உட­லினுள் உள்ள நோய் வெளிக்­காட்­டாது மேலும் தீவி­ர­ம­டைந்து உயி­ருக்குக் கூட ஆபத்தை ஏற்­ப­டுத்தும் என கொழும்பு பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் டாக்டர் எம்.எச்.எம்.நஸீம் வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார்.

அவ­ரு­ட­னான செவ்வி கீழே தரப்­ப­டு­கின்­றது.

கேள்வி:- நடுத்­தர வய­தி­ன­ருக்கு ஏற்­படக் கூடிய தலை­வ­லி­களின் வகைள் எவை?

பதில்: TENSION TYPE HEADACHE, MIGRAINE, CLUSTER HEADACHE ஆகி­ய­வற்றை முக்­கி­ய­மாக கொள்­ளலாம்.

கேள்வி: TENSION TYPE HEADACHE பற்றி விளக்க முடி­யுமா?

பதில்:- இந்நோய் நிலை கழுத்து, தோள்­பட்டை போன்ற இடங்­களில் இருக்கக் கூடிய தசைகள் தொடர்ச்­சி­யான அழுத்தம், வேலைப்­பலு போன்ற கார­ணங்­க­ளினால் சுருங்­கு­வ­தனால் ஏற்­ப­டு­கின்­றன. இங்கு தலை­வலி அதி தீவி­ர­மா­ன­தாக இருக்­காது.

தலையை ஒருவர் இறுக்கிப் பிடிப்­பது அல்­லது அழுத்­தத்தைக் கொடுப்­பது அல்­லது தலைத் தசைகள் சுருங்­கு­வது போன்ற உணர்வு இருக்கும். தலையின் சகல பாகங்­க­ளிலும் தலை­வலி இருக்கும்.தலை­வலி தூக்க மாத்­தி­ரை­களை உட்­கொள்­வதன் மூலம் சிலர் நிவா­ர­ணத்தை பெற்­றுக்­கொண்­டாலும் இத்­த­கை­ய­வர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்கும் போது மன­நலச் சிகிச்­சை­யையும் சேர்ப்­பது முக்­கி­ய­மாகும்.

கேள்வி:- MIGRAINE (ஒற்றை தலைவலி )ஜப் பற்­றியும் விப­ரிக்­கவும்?

பதில்: இது தலை­யி­லுள்ள இரத்தக் குழாய்­களில் ஏற்­ப­டு­கின்ற மாற்­றத்­தினால் தலைப் பகு­திக்கு விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்ற நரம்­பு­களில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் உண்­டா­கின்­றது.. தலை­வலி ஏற்­படும் போது மாறி மாறி இரு பக்­கங்­களில் வலி ஏற்­ப­டு­வ­தோடு குமட்டல், வாந்தி, கை,கால்கள் குளிர்தல், வெளிச்சம், சத்தம் போன்­ற­வற்றை சகிக்க முடி­யாமல் இருத்தல் போன்ற அறி­கு­றிகள் இருக்கும்.

இது அநே­க­மாக தலையின் ஒரு பகு­தி­யையே தாக்­கு­கின்­றது. தினமும் ஏற்­பட கூடிய வாய்ப்பு அரிது. இத் தலை­வலி அதி­க­மாக பெண்­க­ளையே தாக்­கு­கின்­றது. அதிலும் மாத­விடாய் ஏற்­படக் கூடிய காலங்­களில் வரக்­கூ­டிய சாத்­தியக் கூறுகள் அதிகம்.

மிக்ரெய்ன் தலை­வ­லிக்கு தூண்­டு­த­லாக அமை­வது சில உணவு வகைகள், மலச்­சிக்கல், மன அழுத்தம், போதிய தூக்­க­மின்மை, தீவிர கோபம், பிர­கா­ச­மான வெளிச்சம் உடம்பில் குளு­கோசின் அளவு குறைதல் போன்ற கார­ணங்­க­ளினால் ஏற்­ப­டு­கின்­றன. இங்கு தலை­வலி 4 மணித்­தி­யா­லங்கள் தொடக்கம் 72 மணித்­தி­யாலம் வரை இருக்கும்.

கேள்வி:- CLUSTER HEADACHE (கொத்து தலைவலி) ஜப் பற்றி விப­ரிக்க முடி­யுமா?

பதில்: இங்கு தலை­வலி மிகவும் தீவி­ர­மாக இருப்­ப­தோடு ஆண்­க­ளையே அதி­க­மாக தாக்­கு­கின்­றது. இங்கு தலை­வலி ஆரம்­பத்தில் 15 நிமிடம் முதல் 90 நிமி­டங்கள் வரை இருக்கும். ஆனாலும் ஒரு நாளைக்கு 2 அல்­லது 3 முறை ஏற்­ப­டலாம்.

மது­பானம் அருந்­து­வதன் மூலம் இந்நோய் தீவி­ர­ம­டையும். இது தலையின் ஒரு பக்­கத்­தையே விசே­ட­மாகக் கண்­களைச் சுற்­றியும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். மேற்­கு­றிப்­பிட்­டவை தவிர அதிக குருதி அழுத்தம் தலை இரத்த நரம்­பு­களில் ஏற்­ப­டு­கின்ற மாற்றம் மன அழுத்தம், நரம்­பு­களில் ஏற்­ப­டு­கின்ற தாக்கம், கழுத்து சம்­பந்­தப்­பட்ட நோய்கள், மூளையில் கட்டி ஏற்­ப­டுதல் போன்ற நிலை­க­ளிலும் நடுத்­தர வய­திலும் தலை­வலி ஏற்­ப­டலாம். ஆண்­க­ளுக்கு உட­லு­ற­வுக்குப் பின் ஏற்­ப­டு­கின்ற தலை­வ­லியும் ஒரு முக்­கி­ய­மான விட­ய­மாகும்.

கேள்வி:- தலை­வலி ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்கள் எவை?

பதில்:- தலை­வலி ஏற்­பட பல­வி­த­மான கார­ணங்கள் உள்­ளன. அவற்றில் மிக சாதா­ர­ண­மா­னது சில உணவு வகை­களின் ஒவ்­வாமை தன்­மை­யாகும். இதில் சொக்­கலட், சீனி, பத­னி­டப்­பட்ட இறைச்சி வகைகள், nuts எனப்­படும் விதை வகைகள், யோகர்ட், சீஸ், மது­பா­வனை வகைகள், வினா­கிரி போன்­ற­வைகள் அடங்கும்.

தூக்­க­மின்மை, அதிர்ச்சி, காய்ச்சல் அத்­துடன் ஒரு சில­ருக்கு மலச்­சிக்கல், அதி கூடிய பசி போன்ற நிலை­யிலும் தலை­வலி ஏற்­ப­டலாம். இவற்றை தவிர வேறு நோய்­க­ளுக்கு பாவிக்­கப்­படும் வீரியம் கூடிய மாத்­தி­ரை­களின் உக்­கி­ர­தன்­மை­யி­னாலும் தலை­வலி ஏற்­ப­டலாம். மேலும் மாத­விடாய் காலத்தின் போதும், உட­லு­ற­வுக்கு பின்னும் சில­ருக்கு தலை­வலி ஏற்­ப­டலாம்.

தலை­வ­லியின் போது உட்­ப­கு­தியில் ஏற்­படக் கூடிய பல நோய் நிலைகள் உள்­ளன. தலையின் உட்­ப­கு­தியில் இருக்கும் இரத்தக் குழாய்­களின் சில பகு­திகள் மெல்­லிய நிலையில் இருத்தல் அல்­லது வீக்­க­ம­டைதல், மூளையில் ஏற்­படக் கூடிய கட்­டிகள், தலை­யினுள் இரத்தம் கசிதல் மற்றும் அதிக குருதி அழுத்தம் போன்ற நிலை­களில் தலை­வலி ஏற்­ப­டு­கின்­றது. மேலும் மன­நலப் பாதிப்­பி­னாலும் தலை­வலி ஏற்­ப­டு­கி­றது என்­பது முக்­கி­ய­வி­ட­ய­மாகும்.

கேள்வி:- தலை­வ­லிக்கு உட்­கொள்ளும் வலி நிவர்த்தி மாத்­தி­ரை­க­ளினால் ஏற்­படும் பக்­க­வி­ளை­வுகள் எவை?

பதில்:- தலை­வலி என்­பது ஒரு நோய் அறி­கு­றி­யாகும். எமது உடல் நோய்­வாய்ப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை தெரி­விக்கும் ஒரு சமிக்ஞை அறி­கு­றி­யாகும். இந்த சமிக்­ஞையின் பிர­காரம் உட­ன­டி­யாக சரி­யான சிகிச்­சையை பெற்­றுக்­கொள்­ளாமல் pain killers மாத்­தி­ரை­களை உட்­கொண்டு இச்­ச­மிக்­ஞையை முடக்­கி­வி­டு­கின்றோம். இதன் போது உட­லினுள் உள்ள நோய் வெளிக்­காட்­டாது மேலும் தீவிரமடைந்து உயி­ருக்குக் கூட ஆபத்தை ஏற்­ப­டுத்தும்.

அது­மாத்­தி­ர­மன்றி, தலை­வலி ஏற்­படும் போது வைத்­தி­யர்­களின் ஆலோ­ச­னை­யின்றி வலி நிவா­ரண மாத்­தி­ரை­களை தொடர்ந்து எடுக்கும் போது அவை உடம்பில் நச்சுத் தன்­மையை உண்­டாக்கி மருந்து நஞ்­ச­டைதல் தலை­வலி Medicine Over use Headache என கூறப்­படும் தலை­வ­லியை ஏற்­ப­டுத்தும்.

அத்­துடன் இவ்­வாறு உட்­கொள்ளும் மருந்­துகள் நச்சுத் தன்­மை­ய­டையும் போது ஈரல் சிறு­நீ­ரகம் போன்ற உறுப்­புக்­க­ளையும் வெகு­வாகப் பாதிக்­கின்­றன.

கேள்வி: தலை­வ­லியை அடித்­த­ள­மாக கொண்டு வேறு பார­தூ­ர­மான நோய்கள் ஏற்­பட வாய்ப்­புக்கள் உண்டா?

பதில்:- நிச்­ச­ய­மாக அவ்­வா­றான தாக்­கங்கள் ஏற்­படக் கூடிய வாய்ப்­புக்கள் அதி­க­மா­கவே உள்­ளன. தலை­வ­லிக்கு சாதா­ரண உணவு ஒவ்­வாமை முதல் தலை­யினுள் ஏற்­பட கூடிய புற்­றுநோய் கட்­டிகள் வரை பல வகை­யான கார­ணங்கள் உள்­ளன. எனவே நோயின் தன்­மையை பொறுத்து பின் விளை­வுகள் தங்­கி­யுள்­ளன.

இது தவிர தலை­யுடன் சம்­பந்­தப்­பட்ட உறுப்­புக்­க­ளான கண், காது, மூக்கு, பல் போன்­ற­வை­களில் ஏற்­படக் கூடிய நோய்­க­ளுக்கு தலை­வலி ஒரு முக்­கிய கார­ண­மாக அமை­கி­றது. தலை­வலி உக்­கி­ர­ம­டைந்து அதிக குருதி அழுத்தம் ஏற்­பட்டு பாரி­ச­வாதம் ஏற்­படும் நிலைமை உரு­வா­கலாம்.

கேள்வி:- கோபம், மன­அ­ழுத்தம் கார­ண­மாக ஏற்­படக் கூடிய தலை­வ­லி­யி­ருந்து விடு­பட்­டுக்­கொள்­வது எப்­படி?

பதில்:- கோபம் மன அழுத்தம் ஏற்­படும் போது எமது மூளை­யினால் சில அசா­தா­ரண ஹோர்­மோன்­கள சுரக்­கப்­ப­டு­கின்­றன. அடிக்­கடி கோபம் வரு­ப­வர்­க­ளுக்கு இவை தொடர்ந்தும் சுரக்­கப்­பட்டு அவை எமது உடம்பில் தேங்கி பல­வி­த­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன. நிதானம், கிர­கிக்கும் சக்தி போன்­ற­வற்றை இல்­லாமல் செய்­கின்­றன.

மன அழுத்­தத்தின் போதும் இதே­போன்ற சில தாக்­கங்கள் ஏற்­ப­டு­கின்­றன. இவைகள் ஒரு­வ­ரது முழு வாழ்க்­கை­யை­யுமே சந்­தோ­ஷ­மற்ற ஒரு நிலைக்கு கொண்டு செல்­லலாம். கோபம், மன­அ­ழுத்தம் என்­ப­வைகள் வாழ்க்­கைக்கு தடைக்­கற்­களே தவிர படிக்­கற்கள் அல்ல.

கேள்வி:- தலை­வ­லிக்­கான சிகிச்சை முறை­களை எவை?

பதில்: தலை­வ­லிக்­கான சிகிச்சை அதன் கார­ணங்­களைப் பொருத்தே அமை­கின்­றன. சில கார­ணங்­க­ளுக்­காக ஏற்­ப­டு­கின்ற தலை­வ­லிக்கு தொடர்ந்தும் மாத்­தி­ரைகள் எடுக்­க­வேண்­டி­யுள்­ளது. இதன் போது மருந்­து­க­ளினால் ஏற்­ப­டு­கின்ற பக்­க­வி­ளை­வு­களை வைத்­தி­யர்கள் கருத்­திற்­கொள்­வார்கள். ஒரு சில மாத்­தி­ரை­களை பாவிக்கும் போது அவை தனது அன்­றாட வேலை­களை செய்ய தடை­யாக அமையலாம்.

எனவே தலை­வ­லிக்கு சிகிச்சை செய்யும் போது கிரேக்க மருந்துத் தந்­து­வ­ஞா­னி­யான ஹிப்­போ­கி­ரடிஸ் கூறிய “உங்கள் உண­வு­க­ளையே உங்கள் மருந்­தாக்கிக் கொள்­ளுங்கள்” என்ற கூற்றைப் பின்­பற்றி ஒவ்­வொரு நோய்க்கும் ஏற்ற உண­வு­களை உட்­கொள்­வதன் மூலமும் இயற்கை எமக்குத் தந்த இயற்கை மருந்­துகள் மன­நல சிகிச்சை முறைகள் போன்றவற்றின் மூலமும் அநேகமான தலைவிக்கான நிவார ணம் கிடைக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam