பிரான்ஸ் தேவாலய தாக்குதல்: போதகர் கழுத்து வெட்டிக் கொலை..!!
பிரான்சில் தேவாலயத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் அங்கிருந்த போதகரின் கழுத்தை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.மேலும் இத்தாக்குதலில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் உயிருக்கு போராடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்சின் வடக்கில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் இருவர் பலரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 6-7 பேர் வரை இவ்வாறு பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு போதகர், இரண்டு சகோதரிகள் மற்றும் தேவாலயத்துக்கு வந்தவர்கள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.அங்கு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்ட தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..