ஆப்பிள் நிறுவனத்தின் லாபத்தில் வீழ்ச்சி…!!
தொழில்நுட்ப பெருநிறுவனமான, ஆப்பிள், தனது காலாண்டு நிகர லாபத்தில் 27 சதவீத வீழ்ச்சி கண்டிருக்கிறது.
இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான, ஐஃபோன் விற்பனையில் இரண்டாவது தொடர் காலாண்டு பருவத்தில் , வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்கப்பட்ட ஐஃபோன்களின் எண்ணிக்கையைவிட 15 சதவீதம் குறைவான ஐஃபோன்களே இந்த காலாண்டில் விற்கப்பட்டிருக்கின்றன.
ஆயினும், இந்த வீழ்ச்சி என்பது அஞ்சப்பட்டதைக் காட்டிலும் குறைவானதே.
ஆப்பிள் ஐஃபோன்கள், அந்நிறுவனத்தின் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு அளவு வருவாயைத் தருகின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான ஐஃபோனின் பிரபல்யத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி குறித்து சில முதலீட்டாளர்கள் கவலைப்படுகின்றனர். ஆனால் இந்த வீழ்ச்சி வரும் செப்டம்பரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐஃபோன் 7 விற்பனைக்கு வரும்போது தடுத்து நிறுத்தப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
**** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..