சிட்னி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜனுக்கு பதிலாக சிரிப்பூட்டும் வாயு செலுத்தியதால் சிசு பலி…!!

Read Time:1 Minute, 57 Second

201607270611399932_Laughing-gas-kills-newborn-in-Sydney-hospital_SECVPFஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் ‘பேங்க்ஸ்டவுன்-லிட்காம்பி’ ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் புதிதாக பிறந்த 2 சிசுக்களுக்கு ஆக்சிஜன் வாயு செலுத்துவதற்கு பதிலாக தவறுதலாக நைட்ரஸ் ஆக்சைடு (சிரிப்பூட்டும் வாயு) செலுத்தி விட்டனர்.

இதில் ஒரு சிசு பரிதாபமாக உயிரிழந்தது. மற்றொரு சிசுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி ஜில்லியன் ஸ்கின்னர் கூறும்போது, “ இந்த சம்பவம் மிகுந்த வேதனையை தருகிறது. இது துயரமான ஒரு தவறு. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

இருப்பினும் இந்த துயர சம்பவம் நடந்தபோது, மந்திரி ஸ்கின்னர் ஒரு விழாவில் பங்கேற்றது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வாயு வரவேண்டிய குழாயில் நைட்ரஸ் ஆக்சைடு வந்ததுதான் தவறுக்கு காரணம் என கூறப்படுகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக அளவில் உயரமான ஆண்கள் பட்டியலில் நெதர்லாந்து முதலிடம் – பெண்களில் லாத்வியா முதலிடம்…!!
Next post செஞ்சிக்கோட்டையில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சுடிதார் சிக்கியது: போலீசார் விசாரணை…!!