திருப்பதி கசாப்பு கடையில் வெட்டுவதற்கு கொண்டு வந்த ஆட்டை தப்ப விட்டவர் அடித்துக்கொலை…!!
திருப்பதி சுபாஷ்நகரில் ஆட்டிறைச்சிக்கடை வைத்திருப்பவர் முகமதுஅலி(வயது 50). இவர், நேற்று காலை ஒரு ஆட்டை வெட்டுவதற்காக, கூலித்தொழிலாளியான குலாப்(24) என்பவரிடம் ஒப்படைத்தார். குலாப் ஆட்டை வெட்டும் வேளையில், அந்த ஆடு அவரிடம் இருந்து தப்பியோடியது.
அதைப் பார்த்த குலாப் மற்றும் முகமதுஅலி ஆகியோர் ஆட்டை பின்தொடர்ந்து ஓடி பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த ஆடு வயல்வெளியில் புகுந்து ஒரு கால்வாயைத் தாண்டி தப்பி ஓடி விட்டது. இதனால் கோபமடைந்த முகமதுஅலி, ‘வேண்டுமென்றே ஆட்டை தப்ப விட்டு விட்டாய்’ என்று கூறி குலாப்பை தலையில் ஓங்கி அடித்து விட்டு, ஆட்டை மீண்டும் துரத்திக் கொண்டு ஓடினார்.
அடிபட்ட குலாப், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துகிடந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரு பெண்கள், சுயநினைவின்றி கிடந்த குலாப்பை கண்டனர். உடனடியாக அந்தப் பெண்கள், தண்ணீரை கொண்டு வந்து அவருடைய முகத்தில் தெளித்து, சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால் குலாப் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி திருப்பதி அலிபிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஆட்டிறைச்சிக்கடை உரிமையாளர் முகமதுஅலியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..