கழுத்து நெறிக்கப்பட்டு பெண் கொலை..!!
கிரிபத்கொட பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொட பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் படி, கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்தில் 76 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
இதேவேளை சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.