பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் விண்வெளி வீரர்களின் சிறுநீர்… ஏன் தெரியுமா…!!

Read Time:2 Minute, 40 Second

urine_save_002.w540விண்வெளி வீரர்களின் சிறுநீர் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து பல ஆய்வுகள் மேற்கொள்கின்றனர்.

விண்வெளியில் தங்கியிருக்கும் பொழுது வீரர்களின் உடலில் பல்வேறு வளர்சிதை மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக அவர்களின் எலும்புகளின் அடர்த்தி குறிப்பிடத்தக்க அளவு குறையும். மேலும் உணவு சரியாக எடுத்துக் கொள்ளாததால், இயல்பாக நடக்கும் வளர்சிதை மாற்ற சுழற்சி முறை பெருமளவில் பாதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி, அவர்களின் இதயத் துடிப்பு குறையும், கண் விழிகளில் மாற்றம் உள்ளிட்ட உடல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.
இந்த மாற்றத்தை எதிர்கொள்ள பூமியில் இருக்கும்போது கடினமான பல பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. புவியீர்ப்பு விசை இன்றி விண்வெளியில் வேலை செய்யவும் அவர்களுக்கு கற்றுத்தரப்படும்.

அடர்த்தி குறையும் எலும்புகள் கரைந்து விண்வெளி வீரர்களின் சிறுநீர் வழியாக வெளியேறும் என்பதால், அதனை சேமித்து வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. இந்த சிறுநீரில் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் கால்சியம் கலந்திருக்கும். பொதுவாக, நமது உடலில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள் சிறுநீர் வழியாகவே வெளியேற்றப்படும்.

பாட்டில்களில் சேமிக்கப்படும் சிறுநீருடனே அவர்கள் பூமிக்குத் திரும்புகிறார்கள். அந்த சிறுநீர் பல்வேறு ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும். அதனை எவ்வளவு காலத்துக்கு பத்திரப்படுத்த வேண்டுமோ, அவ்வளவு காலம் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிப்ட் திடீரென பழுதடைந்ததால் 4வது மாடியிலிருந்து தவறி விழுந்து கம்பெனி ஊழியர் பரிதாப பலி..!!
Next post வலைக்குள் சிக்கிய வாழ்க்கை…!!