தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்று வலது கையை இழந்த முதியவர்..!!

Read Time:2 Minute, 25 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற நபரின் வலது கையை வெட்டி அகற்றிய சம்பவம் ஒன்று குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் நடந்துள்ளது.

குளியாப்பிட்டிய கிதலவ ஹித்தரகம பிரதேசத்தில் வசித்து வரும் 82 வயதான ரூபாபத்ர முஹாந்திரம்லாகே பொடி சிஙஞோ என்ற நபரே இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார்.

தோல் நோய் அதிகரித்தன் காரணமாக கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி இவர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

வைத்தியசாலையின் மூன்றாவது பிரிவில் இவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது வலது கைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது. இரண்டு தினங்களில் அவரது வலது கையில் கறுப்பு நிறமாக மாறியுள்ளது.

இதனையடுத்து வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் கையில் இரத்தம் கட்டியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

எனினும் கை செயலிழந்து காணப்பட்டுள்ளது. இதனால், வைத்தியர்கள் கையை வெட்டி அகற்ற தீர்மானித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை அதிகாரிகள் இதுவரை எவ்வித விசாரணைகளையும் நடத்தவில்லை என பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளி சென்ற மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில்..!!
Next post சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு மூவர் கைது…!!