பாகிஸ்தான் ஆஸ்பத்திரியில் இந்து டாக்டர் மர்ம மரணம்..!!
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் இந்து டாக்டர் மர்மமான முறையில் பிணமாக கிடந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் இந்து டாக்டர் மர்மமான முறையில் பிணமாக கிடந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கராச்சி அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை அறையை ஒட்டியுள்ள தீவிர சிகிச்சை (ஐ.சி.யூ.) பகுதியில் இன்று காலை டாக்டர் அணில் குமார் என்பவர் நாற்காலியில் அமர்ந்த நிலையில் பிணமாக கிடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வழக்கம்போல், அதிகாலை 5.30 மணியளவில் ஐ.சி.யூ. வார்டுக்குள் சென்ற அணில் குமார்(32) கதவை தாளிட்டு கொண்டதாகவும், சுமார் மூன்று மணிநேரம் கழித்து கதவை உடைத்து திறந்தபோது அவர் நாற்காலியில் அமர்ந்த நிலையில் இறந்து கிடந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது கையில் அவரே விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அணில் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கும் அங்கு கிடந்த சந்தேகத்துக்குரிய ஊசி தடயவியல் பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..