செங்கற்கள் இடிந்து சீனப்பெருஞ்சுவர் அழிகிறது: காப்பாற்ற தீவிர நடவடிக்கை…!!

Read Time:2 Minute, 54 Second

201607301209092736_China-Cracking-Down-on-Great-Wall-Brick-Thieves_SECVPFஉலக அதிசயங்களில் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் திகழ்கிறது. இது சீனாவில் மாங்கோலிய பேரரசின் ஆட்சி காலத்தில் 1368 முதல் 1644-ம் ஆண்டுவரை 4 ஆயிரம் மைல் தூரம் கட்டப்பட்டது.

தங்களின் ஆட்சிப் பகுதியை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற இக்கோட்டை கட்டப்பட்டது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசர்களும் இந்த சுவரை மேலும் கட்டி விரிவு படுத்தினர். அதை தொடர்ந்து 21 ஆயிரம் கி.மீட்டர் தூரத்துக்கு சீனப் பெருஞ்சுவர் உருவானது.

தற்போது அது படிப்படியாக செங்கற்களாக பெயர்ந்து இடிந்து அழிந்து வருகிறது. மங்கோலிய பேரரசர்கள் கட்டிய சுவரில் 30 சதவீதம் அழிந்து விட்டது. காற்று, மழை, வெப்பம் உள்ளிட்ட தட்பவெப்ப நிலை மாற்றத்தினால் பெருஞ்சுவர் சிதிலம் அடைந்து வருகிறது.

மேலும் வீடுகள் கட்ட அப்பகுதி மக்கள் சீன பெருஞ்சுவரின் செங்கற்களை பெயர்த்து எடுத்து செல்கின்றனர். சுவரை பார்க்க வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் நினைவு பொருளாக அந்த செங்கற்கள் திருட்டு தனமாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் சீன பெருஞ்சுவர் அழிக்கப்பட்டு அப்பகுதி விளை நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

இப்பெருஞ்சுவர் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னம் பட்டியலில் உள்ளது. எனவே அதை காப்பாற்ற யுனெஸ்கேம் சீனாவின் கலாச்சார பாரம்பரிய துறை நிர்வாகமும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சீனப் பெருஞ்சுவர் அடிக்கடி அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுகிறது. அரசின் தேசிய சொத்தான சீன பெருஞ்சுவரை பாதுகாக்க அப்பகுதி நகராட்சிகள் அதிரடி நடிவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தான் ஆஸ்பத்திரியில் இந்து டாக்டர் மர்ம மரணம்..!!
Next post சென்னையில் கடத்தப்பட்ட குழந்தையின் கதி என்ன?: சேலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை…!!