சீனாவில் ‘சியாமிஸ்’ என்ற அரிய வகை அழகான 400 குட்டி முதலைகள் பறிமுதல்..!!

Read Time:1 Minute, 33 Second

201607312131519188_About-400-baby-crocodiles-seized-in-China_SECVPFசீனாவின் குவங்ஸி ஜூவாங் மாகாணத்தில் உள்ள டாங்ஜிங் நகரில் எல்லை பாதுகாப்பு போலீசார் வீடுகளை பதிவு செய்யும் தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, மூன்று பேர் ஒரு வீட்டின் பதற்றத்துடன் காணப்பட்டனர். அவர்கள் ஏதோ பொருட்களை கொண்டு சென்றனர். அப்போது அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள முயன்றனர்.

அதில் இரண்டு பேர் டிரக் மூலமாக அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். வீட்டின் பின் வழியாக தப்பிக்க முயன்ற நபர் மட்டும் பிடிபட்டார்.
அந்த வீட்டினை சோதனை செய்ததில் சியாமஸ் வகையை சேர்ந்த 400 குட்டி முதலைகள் பிடிபட்டன.

ஒவ்வொரு குட்டி முதலையும் 25 செ.மீ. நீளம் கொண்டவை. பிறந்து 15 நாட்கள் மட்டுமே ஆனவை. இந்த குட்டி முதலைகள் வியாபாரத்திற்காக அண்டை நாடான வியட்நாமில் இருந்து கடத்தி வரப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட சியாமிஸ் வகை முதலைகள் அரியது என்பதால் சீனாவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றோரை பழிவாங்க மாணவியை கழுத்தை நெரித்து கொன்றேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்..!!
Next post சிரியாவில் ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது: 2 அதிகாரிகள் உட்பட 5 பேர் பலி..!!