பொது இடங்களில்் புகைப்படம் ‘கிளிக்’-சௌதி அரசு அனுமதி

Read Time:2 Minute, 59 Second

saudita_Mannar.jpgசௌதி அரேபியாவில் பொது இடங்களில் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது. இஸ்லாம் மதம் உதித்த மண்ணான சௌதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மற்ற¬முஸ்லீம் நாடுகளைப் போல அல்லாமல், தீவிர மதக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இங்கு பொது இடங்களில் புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களை பத்திரிகைகளில பிரசுரிக்கவும் தடை உள்ளது.

ஆனால் தடையை மீறி சௌதி பெண்களின் முகம் மட்டும் தெரியும் வகையில், பல பத்திரிக்கைகள் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன. இதற்கு முஸ்லீம் மதத் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். அதைத் தடுத்து நிறுத்துமாறு மன்னர் அப்துல்லாவுக்கு அவர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து கடந்த மே மாதம் சௌதி பெண்களின் புகைப்படங்களை பிரசுரிக்க தடை விதித்தார் மன்னர்.

இந் நிலையில், சௌதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பொது இடங்களில் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை மன்னர் அப்துல்லா நீக்கியுள்ளார். இந்த அனுமதி கடந்த ஒரு ஆண்டுக்கு¬ முன்பாகவே வழங்கப்பட்டு விட்டது. ஆனாலும் இப்போது தான் அதை சௌதி உள்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.

இந்தத் தடை நீக்கம் மூலம், சுற்றுலாத் தலங்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்படாத அரசு அலுவலகங்களை யார் வேண்டுமானாலும் இனிமேல் புகைப்படம் எடுக்கலாம்.

அதேசமயம், மன்னரின் அரண்மனைகள், மாளிகைகள் போன்ற தனி நபர்களுக்குச் சொந்தமான இடங்கள், தனி நபர்களை பொது இடங்களில் புகைப்படம் எடுக்க தடை நீடிக்கிறது.

முன் அனுமதி பெற்ற பின்னர்தான் இவற்றை புகைப்படம் எடுக்க முடியும். இந்த தடை நீக்கம் மூலம் சௌதி அரேபியாவின் பெருமைகள், புகைப்படங்கள் மூலமாகவும் வெளியுலகுக்குப் பரவி அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் சௌதிக்கு வருவார்கள் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post காஸ்ட்ரோ உயிரோடு இருக்கிறாரா? அமெரிக்காவில் பரவிவரும் வதந்தி
Next post மூதூர் மோதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்கின்றனர்