ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்கள் அறையில் வசதிகள் இல்லை: இந்திய ஆக்கி சம்மேளனம் குற்றச்சாட்டு..!!

Read Time:2 Minute, 0 Second

201608031229488192_Only-bean-bags-in-Indian-Hockey-players-rooms-at-Olympic_SECVPFவிளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் பிரேசிலில் தொடங்குகிறது. இந்தியா 15 விளையாட்டுகளில் 120 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

போட்டியில் பங்கேற்கும் வீரர் – வீராங்கனைகள் தங்க ரியோடி ஜென்ரோ நகரில் விளையாட்டு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு கிராமத்தில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்திய ஆண்கள் ஆக்கி அணி தங்கியுள்ள அறைகளில் வசதிகள் தரப்படவில்லை என்று பயிற்சியாளர் ஒல்ட்மன்ஸ் இந்திய அணி குழு தலைவர் ராஜேஷ் குப்தாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். வீரர்கள் அறையில் போதுமான நாற்காலிகள், டி.வி. இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய ஆக்கி சம்மேளன தலைவர் நரேந்தர் பத்ராவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த நரேந்தர் பத்ரா, வீரர்கள் தங்கி உள்ள அறைகள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதில் இந்திய ஆக்கி வீரர்கள் காற்றடிக்கப்பட்ட பை போன்ற சேரில் அமர்ந்து உள்ளனர்.

அந்த அறையில் வேறு எந்த வசதியும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் ரியோடி ஜெனீரோ விளையாட்டு கிராமத்தில் வசதிகள் குறைபாடு உள்ளது என்று குற்றச்சாட்டு கூறியது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தடையை மீறி வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை பரிசோதனை..!!
Next post குழந்தைவரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்..!!