கொடைக்கானலில் பிளஸ்-1 மாணவர் தற்கொலை…!!

Read Time:3 Minute, 11 Second

201608040914393467_plus-one-student-suicide-near-kodaikanal_SECVPFகொடைக்கானல் சிவனடி சாலைப்பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி சரோஜினி. இவர்களது மகன் ராஜேஸ்வரன் (வயது 16). கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.

கணவர் பிச்சை இறந்ததையடுத்து அங்குள்ள ஒரு பங்களாவில் வேலை செய்து வரும் சரோஜினி மகனுடன் பங்களாவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.

ராஜேஸ்வரன் பள்ளி கட்டணம் செலுத்தாததால் வகுப்பு ஆசிரியை உடனடியாக கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை ராஜேஸ்வரன் தாயிடம் தெரிவித்தான். தற்போது பணம் இல்லை. சம்பளம் வாங்கியதும் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

நேற்று பள்ளிக்கு சென்ற ராஜேஸ்வரனை, கட்டணம் செலுத்தாததால் ஆசிரியை திட்டியுள்ளார். அனைவரின் மத்தியிலும் கடுமையாக திட்டியதால் ராஜேஸ்வரன் மனமுடைந்தான்.

சோகத்துடன் வீடு திரும்பிய ராஜேஸ்வரன் பள்ளியில் நடந்த சம்பவத்தை தாயாரிடம் தெரிவித்து விட்டு வெளியே வந்தான். பங்களா வளாக பூங்காவில் உள்ள ஊஞ்சலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தான்.

நீண்ட நேரமாகியும் காப்பி சாப்பிட வராத மகனைப் பார்க்க சரோஜினி வெளியே வந்தார். பூங்காவில் மகன் தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

இது குறித்து கொடைக்கானல் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முருகானந்தம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மாணவன் ராஜேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. * * * பூங்காவில் தற்கொலை செய்த மாணவன் ராஜேஸ்வரன்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மும்பையில் மலேரியா காய்ச்சலுக்கு 583 பேர் பாதிப்பு…!!
Next post சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்…!!