என்னது தினமும் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா?… இது என்னடா புதுக்கதையா இருக்குது…!!

Read Time:3 Minute, 37 Second

egg_danger_002.w540முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.

வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு 23 விழுக்காடு அதிகரிக்கும் என்பதே அந்த ஆய்வு!

அதிலும் குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் இந்த எல்லையைத் தாண்டி முட்டையை உட்கொண்டால் ஆபத்து அதிகமாம்.

நீரிழிவு நோயாளிகள் எனில் முட்டையின் பக்கம் பார்வையைக் கூட திருப்பக் கூடாதாம். அவர்கள் ஒரு முட்டை சாப்பிட்டாலும் அது அவர்களுக்கு இன்னலை உண்டாக்கி விடக் கூடும். விரைவில் மரணமடையும் வாய்ப்பு 50 விழுக்காடு அதிகரிக்கும். இப்படி அடுக்கடுக்காய் சொல்லி முட்டை பிரியர்களின் விருப்பத்துக்கு முட்டுக் கட்டை போட்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதய நோய், வலிப்பு போன்ற பல நோய்களை இந்த “அதிக முட்டை உண்ணும் பழக்கம்” இழுத்துக் கொண்டு வந்து நமது உடலுக்குள் புகுத்தி விடுகிறது. முட்டையில் காணப்படும் அதிகப்படியான கொழுப்புச் சத்து இதன் காரணமாய் இருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த ஆய்வை நிகழ்த்திய ஹார்வேர்ட் குழுவினர் சுமார் இருபத்து ஏழு ஆண்டுகளாக, இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வு செய்து இந்த முடிவை எட்டியிருக்கின்றனர்.

இதய நோய்க்கும் முட்டைக்கும் இடையே நிரூபிக்கப்பட்ட தொடர்பு ஏதும் இல்லையென்றாலும் இருபது ஆண்டு இடைவெளியில் அதிக முட்டை சாப்பிட்டவர்களில் 23 விழுக்காட்டினர் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது முட்டை உணவின் பாதுகாப்பற்ற தன்மையை விளக்குகிறது.

எனினும் அதிகபட்சமாக ஆறு முட்டைகள் வரை உண்பது கெடுதலை ஏற்படுத்துவதில்லையாம். முட்டையும் எல்லா உணவு வகைகளையும் போன்றதே! மிக நன்று எனவோ, மிகவும் கெடுதல் எனவோ தெளிவான நிர்ணயம் செய்ய முடியாது எனவும் அவர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.

முட்டை மீதான இந்த ஆராய்ச்சி “அளவோடு உண்டு வளமோடு வாழ” நம்மை எச்சரிக்கிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரியாலிட்டி ஷோவில் நடந்த விபரீதம்! விளையாட்டு வினையானது…!! வீடியோ
Next post கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான சத்துள்ள உணவுவகைகள்…!!