பிரான்ஸ் நாட்டு வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய ஒயின் வெள்ளம்…!!

Read Time:2 Minute, 30 Second

201608051629251152_france-streets-flooded-with-wine_SECVPFஉள்நாட்டு தேவைக்காக ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒயினை மலிவான விலையில் பிரான்ஸ் இறக்குமதி செய்து வருகிறது. இதனை உள்நாட்டு மது உற்பத்தியாளர்களும் சில போராட்டக்குழுவினரும் எதிர்த்து வருகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் ஸ்பெயின் நாட்டில் இருந்து சுமார் 4 ஆயிரம் கோடி லிட்டர் ஒயின் வகைகளை பிரான்ஸ் நாட்டு மது வியாபாரிகள் இறக்குமதி செய்துள்ளனர்.

இதனால், கொதிப்படைந்த போராட்டக்காரர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஸ்பெயின் – பிரான்ஸ் எல்லைப்பகுதி வழியாக ஒயினை ஏற்றிவந்த 5 டேங்கர் லாரிகளை வழிமறித்து சிறைபிடித்தனர். அவற்றில் இருந்த சுமார் ஒரு லட்சம் பாட்டில் அளவிலான ஒயினை வீதியில் கொட்டி நாசப்படுத்தினர்.

இந்நிலையில், சிடே என்ற துறைமுக நகரத்தில் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒயின் வகைகளை இறக்குமதி செய்து விற்றுவரும் ஒரு கடையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அந்த கடையில் இருந்த ஐந்து ஒயின் பீப்பாய்களை அடித்து உடைத்தனர். பீப்பாய்களில் இருந்து வெளியேறிய ஒயின் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

இந்த ஒயின் வெள்ளம் சாலைகள் மட்டுமின்றி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் கார் பார்க்கிங் பகுதிகளயும் சூழ்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! ““நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்..!!
Next post ஆப்கானிஸ்தான் எல்லையில் மாயமான பாகிஸ்தான் ஹெலிகாப்டர்: தீவிரவாதிகளிடம் சிக்கியதாக தகவல்…!!