சிறுதானிய உணவு பிசினஸ்…!!

Read Time:3 Minute, 30 Second

Millets-foodசிறுதானியங்களைப் பற்றிய விழிப்புணர்வு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சிறுதானிய உணவுத் தயாரிப்பை பிசினஸாக எடுத்துச் செய்ய நினைக்கிறேன். என்னவெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்? நடராஜன், கல்வி அலுவலர், காந்தி நினைவு அருங்காட்சியகம் இன்று சிறுதானிய உணவுகளுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எல்லோரும் அன்றாட உணவில் ஒருவேளையாவது சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த மாற்றம் ஆரோக்கியமானதுதான் என்றாலும் பலருக்கும் அதைப் பின்பற்ற நேரமோ, பொறுமையோ இல்லை. இப்படிப்பட்டவர்களை உங்கள் வாடிக்கையாளர்களாக இலக்கில் கொண்டு சிறுதானிய உணவுத் தயாரிப்பு பிசினஸில் துணிந்து இறங்கலாம். சிறுதானிய உணவுகளில் 2 வகைகள் உள்ளன.

ஒன்று உடனடியாக சமைத்து சாப்பிடக்கூடியது. குதிரைவாலி பிரியாணி, வரகு வெண் பொங்கல், தினை பாயசம் போன்று நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.அடுத்தது நொறுக்குத் தீனிகளாக செய்து சாப்பிடக்கூடியவை. தினை லட்டு, வரகு முறுக்கு, கம்பு லட்டு போன்றவை. இதே போல சிறுதானிய சத்து மாவையும் தயாரித்து வைத்துக் கொண்டு 6 மாதங்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். இந்த மாவில் தோசை, புட்டு போன்றவற்றையும் செய்து சாப்பிடலாம்.உடனடியாக செய்து சாப்பிட ஏதுவாக ரெடிமேட் அடை மிக்ஸ், பிரியாணி மிக்ஸ், பொங்கல் மிக்ஸ் போன்றவற்றை செய்யக் கற்றுக் கொண்டு பிசினஸ் தொடங்கலாம். பகுதிநேரமாக ஸ்நாக்ஸ் வகையறாக்களையும் செய்து விற்கலாம். சிறுதானியங்களில் மொத்தம் 7 வகைகள் உள்ளன.

ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாள் சேர்த்துக் கொள்வதே சிறந்தது. அதே போல ஒருநாள் கூழாக, ஒருநாள் களியாக, ஒருநாள் சாதமாக… இப்படி மாற்றி மாற்றி உண்பதுதான் சரியானது. வெளியிடங்களில் சிறுதானிய சமையல் என்கிற பெயரில் நிறைய ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. உதாரணத்துக்கு குதிரைவாலியுடன் கொஞ்சம் குருணை சேர்த்து சமைத்து விற்கிறார்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நல்ல குழந்தைகளாக வளர்க்கணும்..!!
Next post பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 42 பேர் பலி…!!