அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள்…!!

Read Time:9 Minute, 52 Second

Headageஅதிர்ச்சி

அதிர்ச்சி ஏற்படுவதற்குப் பல காரணங்களை உதாரணமாகச் சொல்லலாம். இழப்பு, அலர்ஜி, தொற்று, இன்ன பிற, அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களை இனம் காண சில அடிப்படைகள்.
தோல் ஜில்லிட்டு இருக்கும், வெளுத்துப் போய் காணப்படும்.
நாடித் துடிப்பு குறையும். சுவாசம் சீராக இருக்காது, அல்லது வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். ரத்த அழுத்த அளவு குறையும்.

கண்கள் எதையோ வெறித்துப் பார்த்தபடி இருக்கும். கண் விழி அகண்டு இருக்கும்.
மயக்கமடைந்து நிலையிலோ அல்லது விழிப்புடனோ இருப்பார்கள். விழிப்புடன் இருந்தால், குழப்பத்துடன், வலுவிழந்து காணப்படுவர் பதட்டம் அதிகரிக்கும்.
சில முக்கிய அறிகுறிகள்
வெளிறிய அறிகுறிகள்
ஜில்லிட்ட தேகம்
அதிகரித்த நாடித் துடிப்பு
பதற்றம்
தாகம்
சுகவீனம்

அடிப்பட்டதால் அதிர்ச்சியடைந்தவர்களை என்ன செய்ய வேண்டும்?
மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளலாம்.
சாய்ந்த நிலையில் படுக்க வைக்கலாம்.
நாடித் துடிப்பு, இருமல், சுவாசம், இயல்பாக இருக்கிறதா என்று பார்க்கவும் இல்லை என்றால் சிறிசிஸி- ஐத் தொடங்கவும்.
தோதான நிலைக்கு அழைத்துச் செல்லவும், இறுக்கமான உடைகளைத் தளர்த்தவும், தாகம் என்று கேட்டால் கூட தண்ணீர் தர வேண்டாம்.
ரத்தத்துடன் வாந்தி எடுத்தால், அவரைக் கவனமாக மீட்பு நிலைக்கு எடுத்துச் செல்லவும்.
காயத்துக்கு மருத்துவ உதவி பெற்றுத் தரவும்.

மூக்கு வழியாக ரத்தம் கசிதல்
பரவலான சங்கதி இது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் பெரும்பாலும் மூக்கின் உட்புறத்திலிருந்துதான் (ஷிமீஜீtuனீ) ரத்தக் கசிவு ஏற்படும்.
நடுத்தர வயதுக்காரர்களுக்கும் வயதானவர்களுக்கும் கூட மூக்கின் உட்புறத்திலிருந்து ரத்தம் கசியலாம். அதே சமயம், ஆழமான கசிவாகவும் இருக்கலாம். இறுக்கமாகிப் போன ரத்தக்குழாய் காரணமாகவோ அல்லது அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாகவோ கூட இந்தக் கசிவு ஏற்பட்டிருக்கலாம். பல சமயங்களில் இந்தக் கசிவை நிறுத்த முடியாது. தேர்ந்த மருத்துவ சிகிச்சை தேவை.

என்ன செய்யலாம்?
உயர்த்திய நிலையில் இருந்தால் ரத்தக் கசிவு நிற்கலாம்.
ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு மூக்கைக் கிள்ளுவது போல் அழுத்திப் பிடிக்கலாம். அந்தச் சமயத்தில், வாய் வழியாக சுவாசிக்கலாம்.
மூக்கைச் சிந்தக் கூடாது. கீழே குனியவும் கூடாது.

உடனடி அவசர சிகிச்சை எப்போது தேவைப்படும்?
20 நிமிடங்களுக்கும் அதிகமாக ரத்தப் போக்கு இருந்தால்
மீண்டும் மீண்டும் ரத்தக் கசிவு ஏற்பட்டால்
கீழே விழுந்ததாலோ தலையில் அடிபட்டதாலோ மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட்டால்.

வெளிப்புற பொருள்கள்
காது
வெளிப் பொருள்கள் காதில் சிக்கிக் கொண்டர்ல் வலி அதிகரிக்கும். கேட்கும் திறன் குறையும். ஏதேனும் பொருள் காதில் சிக்கிக் கொண்டால், உடனடியாகக் கண்டுபிடித்து விடலாம். குழந்தைகளால் இது முடியாது.
என்ன செய்யலாம்?
குச்சி போன்ற பொருள்களால் காதைக் குடைவது தவறு. அப்படிச் செய்தால் சிக்கிக் கொண்ட பொருள் உள்ளே போய்விடக் கூடும்.
காதில் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரியும்படி இருந்தால், இலாவகமாக அதை வெளியில் எடுக்க முயற்சிக்கலாம்.
மெதுவாகத் தலையைச் சாய்த்துப் பொருளை கீழே விழ வைக்க முயற்சிக்கலாம். ஏதேனும் பூச்சி புகுந்துவிட்டால், மினரல் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைக் காதில் மிதக்க விடலாம். காது மடலால் மெலிதாக அசைத்த அந்தப் பூச்சியை எண்ணெயில் விழ வைக்கலாம். பூச்சி மிதக்க ஆரம்பித்தவுடன் வெளியில் எடுக்க முயற்சிக்கலாம்.

பூச்சியைத் தவிர பிற பொருள்களை வெளியில் எடுக்க எண்ணெயை காதில் ஊற்றக்கூடாது.
அப்படியும் பிரச்சனை தீரவில்லை என்றால் மருத்துவ உதவி பெறுவத அவசியம்.
கண்
என்ன செய்யலாம்?
கையைக் கழுவிக் கொள்ளவும்.
நன்றாக வெளிச்சம் உள்ள பகுதியில் சம்பந்தப்பட்டவரை உட்காரச் சொல்லவும்.
கண்ணில் சிக்கிக் கொண்ட பொருள் தென்படுகிறதா என்று பார்க்கவும். இமையை கீழ்ப்புறமாக மடக்கி அவரை மேலே பார்க்கச் சொல்லவும். மேல்புற இமையைப் பிடித்துக் கீழ்ப்புறமாக அவரைப் பார்க்கச் சொல்லவும்.
கண் திரையில் அந்தப் பொருள் சிக்கியிருந்தால், வெதுவெதுப்பான நீரைக் கொண்டு வெளியில் எடுக்கலாம்.

கவனம்
கருவிழியில் சிக்கியிருக்கும் பொருளை வெளியில் எடுக்க முயற்சிக்க வேண்டாம்.
கண்ணை கசக்க வேண்டாம்.

அவசர சிகிச்சை எப்போது பெறலாம்?
வெளியில் எடுக்க முடியாத பட்சத்தில்
கரு விழியில் சிக்கிக் கொண்டால்
பார்வை சரிவரத் தெரியாமல் அவர் அவதிப்பட்டால்
வலி இருந்தால், சிக்கிக் கொண்ட பொருளை வெளியில் எடுத்த பின்னும் எரிச்சல் இருந்தால்.

மூக்கு
வெளிப்புற பொருள் மூக்கில் நுழைந்துவிட்டால்
உபகரணங்களைக் கொண்டோ, பஞ்சைக் கொண்டோ வெளியில் அகற்ற முயற வேண்டாம்.
மூச்சை உள்ளிழுக்க வேண்டாம். வாய் வழியாகச் சுவாசிக்கலாம்.
மெதுவாக மூக்கைச் சிந்துவதன் மூலம் பொருளை வெளியேற்றலாம். கண்ணுக்குத் தெரியும் பொருளாக இருந்தால் Tweezers கொண்டு வெளியில் அகற்றலாம்.
முயற்சி தோல்வியடைந்தால், உடனடி மருத்துவ உதவி அவசியம்.

தோல்
தோலில் ஏதேனும் குத்தி விட்டால், Tweezers கொண்டு அகற்றலாம். குத்திய இடத்தை சோப், தண்ணீர் கொண்டு கழுவலாம்.

தோலை ஊடுருவி முழுமையாக உள்ளே சென்று விட்டால்?
சோப், தண்ணீர் விட்டுக் கழுவவும்.
நெருப்பில் காட்டப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியை எடுத்துக் கொள்ளவும்.
மெலிதாக தோலில் செருகி, குத்திய பொருளை மேல்நோக்கி நகர்த்தலாம்.
தென்பட்டு விட்டால், பொருளை வெளியில் எடுத்து விடலாம். சில சமயம், பெரிதுபடுத்திக் காட்டும் பூதக் கண்ணாடி தேவைப்படலாம்.
குத்தப்பட்ட பகுதியைக் கழுவி காயவிடவும், ஆண்டிபயாடிக் களிம்பு தடவலாம்.
இயலவில்லை என்றால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.

மாரடைப்பு
இதயத்துக்கு வந்து சேர வேண்டிய ரத்தமும், பிராண வாயுவும் தடைபட்டால் மாரடைப்பு ஏற்படும். மாரடைப்பு வந்தால் 15 நிமிடங்களுக்கு நெஞ்சு வலி நீடிக்கும். சில சமயம் எந்த அறிகுறியும் இல்லாமலும் இருக்கும். பெரும்பாலானோருக்குச் சில நாள்கள் அல்லது வாரங்களுக்கு முன்பாகவே அறிகுறிகள் தெரிந்து விடும். பொதுவான ஒரு அறிகுறி, நீடித்த நெஞ்சு வலி .

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மராட்டிய மாநிலத்தில் இன்று டாக்டர் தம்பதியர் குத்திக் கொலை…!!
Next post ஒலுவில் கடலரிப்பு விவகாரம்: பல்லக்கும் கால்நடையும்…!!