3டி முறையில் உடலை ஸ்கேன் செய்து பச்சை குத்தும் ரோபோ…!!

Read Time:2 Minute, 20 Second

201608091700372765_Looking-to-Get-Inked-This-Tattoo-Making-Robot-Can-Help_SECVPFகடந்த காலங்களில் பச்சை குத்துவது என்பது கஷ்டமான வி‌ஷயமாக இருந்து வந்தது. ஊசியால் அதற்கான நிபுணர்கள் குத்தும்போது வலியை தாங்கிக் கொண்டு இருக்க வேண்டும்.

ஆனால் இப்போது வலி இல்லாமல் பச்சை குத்தும் நவீன எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. வெளிநாடுகளில் இந்த எந்திரங்களால் தான் பச்சை குத்தப்படுகின்றன.

இப்போது அதைவிட முன்னேற்றமாக ரோபாட் மூலம் பச்சை குத்தும் முறையை கண்டுபிடித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பச்சை குத்தும் நிபுணர்கள் பியரிஎம், ஜோகன்சில்வேரா ஆகியோர் இந்த ரோபாட்டை கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்கா சான்பிரான் சிஸ்கோவில் உள்ள ஆட்டோ டெஸ்க் சாப்ட்வேர் நிறுவனம் உதவியுடன் இந்த ரோபாட்டை உருவாக்கி உள்ளனர்.

இந்த ரோபாட் முதலில் உடலை 3-டி முறையில் ஸ்கேன் செய்யும். அதன்பிறகு எந்த மாதிரி பச்சை குத்தினால் அது சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கும். அதன்படி பச்சை குத்தும் படங்களை கம்ப்யூட்டரில் உருவாக்கி விட்டால் அதன் மூலம் ரோபாட் தானாக இயங்கி பச்சை குத்தும் பணியை செய்யும்.

இது மற்ற முறைகளை விட மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கென்யா லாட்ஜில் பெண் படுகொலை: சீன சுற்றுலாப் பயணி வெறிச்செயல்…!!
Next post அயோத்தியில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் 7 பக்தர்கள் உடல் நசுங்கி பலி…!!