திருமணத்தில் தாலி நுழைந்த கதை தெரியுமா?.. ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது..!!

Read Time:3 Minute, 21 Second

thali_002.w540திருமணமுறை பற்றி….

தாலி கட்டும் வழக்கம் பற்றி சில இணையங்களில் பிழையாக கிடைத்த தகவல்களை பதிவிட்டிருந்தமையை அண்மையில் காணக்கூடியதாய் இருந்தது.

சங்ககாலத்தில் தாலி கட்டும் கிரியை முறை திருமணம் இல்லை. சங்கமருவியகாலத்தில் சங்கக் காதல் சந்தேகக்காதல் ஆனது.

“பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” சங்கமறுவியகாலத்தில் …. கரணம் என்றால் “கிரியை” -முறையில் திருமணம்.

ஏன் சங்கமருவியகாலத்தில் திருமணம் கிரியை முறையில் மக்கள் மத்தில் சாட்சி வைத்து செய்ய வேண்டி நேர்ந்தது?… சங்க காலத்தின் இறுதியில் அந்த தூய காதல் அசுத்தப்பட்டமையே காரணம்.

“நானும் அவனும் புணர்ந்த காலை குறுக்கு பார்த்திருந்த தான் பொய்ப்பின் நான் எது செய்வேன் யாருமில்லை தானே கள்வன்” இது ஒரு அபலைப்பெண்ணின் குரல்.

இந்த அடிகள் கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் பெண்ணை கைகழுவி விடும் போக்கு அதிகரித்தமையை காட்டுகிறது. ஆகவே கிரியை முறை திருமணம் தேவைப்பட் டது .

தாலி பற்றி…..

தாலி என்ற சொல் தாலிகம் என்ற சொல்லின் அடியாக பிறந்தது. தாலிகம் என்றால் பனை மரம் என்று பொருள் படும்.

அதாவது பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் காட்டுவார்கள். தாலி பொருளாகுபெயராகத்தான் இங்கே பயன்படுத்தப்படுகிறது.

பின்னைய காலங்களில் மனித சிந்தனை நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை இன்றைய பவுனாக அதாவது தங்கமாக மாறியுள்ளது.

தமிழனின் பண்பாடு கலாசாரம் போன்றவற்றை விபரிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் கருத்து அதில் ஒரு நெகிழ்ச்சித்தன்மை உண்டு.

ஆக மொத்தத்தில் சங்கமருவிய காலமான கி.பி.3ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி.6ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியிலேயே திருமண கிரியை முறைகள் நடைமுறையில் இருந்தன என அறியக்கிடக்கின்றது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ் பல்கலை: மூடப்பட்ட விஞ்ஞான பீடம் திறப்பு..!!
Next post என்ஜின் கோளாறு காரணமாக மாயமான மலேசிய விமானம் அதிவேகமாக கடலில் விழுந்தது: ஆஸ்திரேலிய வல்லுனர்கள் கண்டுபிடிப்பு..!!