தமிழ் ஊடகங்களால், அநியாயமாக நிறுத்தப்பட்ட புங்குடுதீவு செத்தவீடு: “தடி எடுத்தவனெல்லாம் தண்டக்காரனானால்”?.?.?.?…

Read Time:4 Minute, 39 Second

002obf
தமிழ் ஊடகங்களால், அநியாயமாக நிறுத்தப்பட்ட புங்குடுதீவு செத்தவீடு: “தடி எடுத்தவனெல்லாம் தண்டக்காரனானால்”?.?.?.?…

புலம்பெயர் தேசமெங்கும் கணணியை எல்லோரும் கையாளலாம் என்ற நிலை வந்துவிட்டதால், ஊனமான செய்திகளை எல்லாம் ஊடகங்களுக்கு அனுப்பி வைப்பதுடன், அவற்றை நம்பகரமானதாக்கி ஊடகங்களை ஊனமுற்ற நிலையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றது இன்றைய நம் புலம்பெயர் சமூகம்.

அந்த வகையில் தான் கடந்த மாதம் பிரன்சின் புறநகர் பகுதியில் தனிப்பட்ட முறையில் பாதிப்பிற்கு உள்ளாகி இறந்துபோன புங்குடுதீவை சேர்ந்த இராமலிங்கம் ஞானசேகரன் என்பவரின் மரணத்திற்கான காரணம் ‘பிரான்ஸ் – நீஸ்” என்ற மாநிலத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலின் போது இறந்ததாக செய்தியைப் பரப்பி விட்டது மாத்திரமன்றி, அதனை இலங்கையில் உதயன் பத்திரிகையிலும் விளக்கமாகப் போட்டு வேடிக்கை பார்த்திருக்கின்றார்கள்.

அதனைப் பார்த்த ஐரோப்பிய செத்தவீட்டு விளம்பரத்தை வைத்து வயிறு நிரப்பும் ஊடகமான “லங்கா ஸ்ரீ” குழுமமும் (லங்கா ஸ்ரீ, தமிழ்வின், ஜே.வி.பி, மனிதன்) அவசர அவசரமாக அதனை மீள் பதிவு செய்துள்ளது.

(பின்னர் “அதிரடி”, “நிதர்சனம்.நெட்”, “இலக்கியா”, “லங்கா சீ”, போன்ற இணையங்களில் உண்மையை தெளிவாகக் குறிப்பிட்டு, “செத்தவீட்டு விளம்பரத்தில் வயிறு வளர்க்கும் நீங்கள், ஒருவரின் இறப்பையும் உங்கள் கற்பனையில் எழுதி, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாமென” குறிப்பிட்டு செய்தி வெளியிட்டவுடன், “யாழ்.உதயன் மற்றும் லங்கா ஸ்ரீ” தமது செய்திகளை உடனடியாக நீக்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது)

அதற்கு முன்னதாக இலங்கைத் தூதரகம் நீஸ் மாநிலத்தில் நடைபெற்ற அசம்பாவிதத்தில் இலங்கை மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என அறிக்கை விட்டிருந்தது. அதனையும் மீறி தான்தோன்றித் தனமான செய்திகளை வெளியிட்டதன் மூலம் பிரன்ஸ்வாழ் தமிழ் மக்களிடையே ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்கள்.

இறந்து போனவரின் உடலை காலக்கிரமத்தில் அடக்கம் செய்ய முடியாமல், விளக்கம் என்ற பெயரில் பின்போடப்பட்டுள்ளது. அவரது உடலை அடக்கம் செய்ய முயற்சி எடுத்த “பிரான்ஸ் வாழ். புங்குடுதீவு மக்களின்” முயற்சியில் ஒரு தேக்க நிலையை உருவாக்கி, அவர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றார்கள்.

மேற்படி சமூக நலன்களைக் கருத்திற் கொண்டு, கணணிகளைப் பாவிப்பவர்கள் உங்கள் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடிதம் எழுதுங்கள், கவிதை எழுதுங்கள், கதை எழுதுங்கள், கட்டுரை எழுதுங்கள். ஆனால் ஊடகவியலாளர்கள் என்று உங்களை நீங்களே தம்பட்டம் அடித்து, ஏமாற்றிக் கொண்டு, ஊகமாக செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கியும், உங்களின் ஊடகங்களில் பிரசுரித்தும், உங்கள் ஊடகங்களை ஊனமாக்கி, ஊரை அவலத்திற்கு உள்ளாக்கும் நிலைக்குக் கொண்டுவந்து விடாதீர்கள்.

இந்நிலை மீண்டும் உருவாகாமல் அனைவரும் மிகக் கவனமாக நடந்து கொள்ளுமாறு மக்கள், ஊடகங்களுக்குச் சொல்லி விசனப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு வந்துள்ளனர்..

-புங்கையூர் பிரம்மா- (சில மாற்றங்களுடன்)

** இதுகுறித்த முன்னைய செய்தியை பார்வையிட…

செத்த வீட்டு விடயத்திலும், வாசகர்களை குழப்பும்.. “லங்கா ஸ்ரீ” இணைய குழுமம்..!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்ஜின் கோளாறு காரணமாக மாயமான மலேசிய விமானம் அதிவேகமாக கடலில் விழுந்தது: ஆஸ்திரேலிய வல்லுனர்கள் கண்டுபிடிப்பு..!!
Next post புத்திசாலியான குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமா?… கர்ப்பிணி பெண்களே இது உங்களுக்குத்தான்…!!