விஜய் சேதுபதிக்கு மனைவியான ஆண்ட்ரியா..!!
கைவசம் அரை டஜன் படங்களை வைத்திருந்தாலும், நட்பு அடிப்படையில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்ட நிலையிலும் இன்னும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை என்றே சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவி வேறு இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய மனைவி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே, இன்னொரு ஹீரோயினாக இந்த படத்தில் அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது ஆண்ட்ரியாவும் ஒப்பந்தமாகியுள்ளது படத்திற்கு மேலும் பலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். முன்னதாக, இப்படத்தின் ஹீரோயினாக சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், கால்ஷிட் பிரச்சினை காரணமாக அவர் பின்வாங்கிவிட்டார். தற்போது, அமலாபால், ஆண்ட்ரியா என இரண்டு ஹீரோயின்களை தேர்வு செய்துள்ளனர். மேலும், இன்னொரு ஹீரோயின் இதில் நடிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Average Rating