ஆண்களுக்கு அதிகரிக்கும் எயிட்ஸ்..!!
ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரித்துக் காணப்படுவதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையான காலப் பகுதியில் எச்.ஐ.வி தொற்று ஆண்களுக்கு அதிகரித்து காணப்படுவதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்புப் வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ் வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 153 பேருக்கு எயிட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் அதிகமானவர்கள் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இதன்படி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், ஆண்களுக்கு எயிட்ஸ் தொற்று ஏற்படுவது நூற்றுக்கு 25 வீதம் வரை அதிகரித்து காணப்படுவதாக வைத்தியர் சிசிர லியனகே குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் ஓரினச் சேர்க்கையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை, எயிட்சினால் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு தனது கணவர் அல்லது காதலன் மூலமே இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Average Rating