ஆண்ரோயிட் கைபேசி பாவனையாளர்களுக்கான எச்சரிக்கை!! ஆய்வுகள் மூலம் அறியவந்த உண்மை..!!

Read Time:1 Minute, 54 Second

4-inch-iphone-se-leaked-new-videolooks-exactly-like-iphone-6-6sஆண்ரோயிட் ;செயலிகள் (மொபைல் அப்ளிகேஷன்கள்) மூலம் ஒருவரை எளிதாக உளவு பார்க்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்காவின் நோர்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த கூற்றினை ஒரு ஆண்ரோயிட் செயலி மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

அவர்கள் உருவாக்கிய ஆண்ரோயிட்;செயலியைக் கொண்டு கைபேசி மூலம் ஒருவரின் இருப்பிடம் மற்றும் பயணிக்கும் இடங்கள் ஆகியவற்றை உளவு பார்க்க முடியும் என நிரூபித்துள்ளனர்.ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த நோர்த்;ஈஸ்டர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் குவேரா நோபிர், கூகுள் நிறுவனத்தின் ஆண்ரோயிட் அப்ளிகேஷன்களைப் பதிவிறக்கும் பிளே ஸ்டோரில், 25 அமெரிக்க டொலர்கள் பணம் செலுத்தி எந்தவொரு நபரும் ஒரு செயலியை மக்களின் பயன்பாட்டுக்காக பதிவேற்ற முடியும்.

அந்த செயலிகளின் நம்பகத்தன்மை குறித்து யாரும் சோதிப்பதில்லை.எனவே, ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யும் போது அதன் நம்பகத்தன்மை குறித்து சிந்தித்து முடிவெடுப்பது சிறந்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற ஆண்ரோயிட்;செயலிகள் மூலம் ஒருவரின் அனுமதியின்றி கண்காணிக்க முடியும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவாதி கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!
Next post கிருஷ்ணகிரியில் பிடிபட்ட வெள்ளைக் காகம்..!! (வீடியோ)