ரியோ: பளுதூக்கும்போது அர்மேனிய வீரரின் முழங்கை முறிந்த பரிதாபம்..!! (வீடியோ-இதயம் பலவீனமனோர் பார்க்க வேண்டாம்)

Read Time:2 Minute, 0 Second

201608111557121281_Rio-2016-Armenian-weightlifter-suffers-shocking-dislocated_SECVPFரியோ ஒலிம்பிக்கில் 77 கிலோ எடை பிரிவினருக்கான பளுதூக்கும் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 20 வயதான அர்மேனிய வீரர் ஆண்ட்ரானிக் கராபெட்யான் கலந்து கொண்டார். இவர் க்ளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 195 கிலோ எடையை தூக்க முயன்றார். தலை வரை தூக்கிய அவருக்கு பேலன்ஸ் கிடைக்காமல் போனது. அப்போது தன்னை நிலைநிறுத்த முயற்சித்த போது இடது கை முழங்கையில் முறிவு ஏற்பட்டது. இதனால் வலியில் துடித்த அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஸ்னெச்ட் பிரிவில் 2-ம் இடம் பிடித்த இவர், க்ளீன் அண்டு ஜெர்க் பிரிவில் அசத்திக் கொண்டிருந்தார். துரதிருஷ்டவசமாக காயம் ஏற்பட்டதால் அறிமுக ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கும் வாய்ப்பை இழந்தார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் பிரான்ஸ் ஜிம்னாஸ்டிக் வீரர் சமீர் அயிட், ஜிம்னாஸ்டிக் போட்டிக்கான தகுதி சுற்றில் பங்கேற்ற போது அவரது இடது கால் முறிந்தது.

பெண்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றபோது, நெதர்லாந்தை சேர்ந்த வீராங்கனை அன்னெமிக் வான் விலுடின் விபத்தில் சிக்கி காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்பாறை அகழ்வாராய்ச்சி தளத்தில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு மீட்பு..!!
Next post ஒலிம்பிக் போட்டிகள்: திடீரென பச்சை நிறமாக மாறிய நீச்சல் குளம்..!!