கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான புதிய உடன்படிக்கை இன்று கைச்சாத்து..!!

Read Time:1 Minute, 50 Second

Colombo-Port-Cityகொழும்பு துறைமுக நகர நிர்மாணத்திற்கான புதிய உடன்படிக்கை இன்று (12) கைச்சாத்திடப்படவுள்ளதாக மேல்மாகாண மற்றும் மாநகரங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய பழைய உடன்படிக்கை இரத்து செய்யப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டார்.

புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகின்ற போதிலும், துறைமுக நகர நிர்மாணத்திற்குப் பொறுப்பான சீன நிறுவனத்திற்கு, தாமதக் கட்டணம் செலுத்துவதற்கு தேவையில்லை என்றும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

நாட்டிற்கு நன்மை ஏற்படும் விதத்தில் புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க மற்றும் சீன நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் புதிய உடன்படிக்கையில் இன்று மாலை கைச்சாத்திடவுள்ளனர்.

சூழல் சாத்தியக்கூற்று அறிக்கையை உரியவாறு தயாரிக்காமை உள்ளிட்ட சில பிரச்சினைகளின் அடிப்படையில், கடந்த அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புரோட்லேண்ட் நீர்மின் நிலையத் திட்டத்தின் அகழ்வுப் பணிகள் காரணமாக நிலம் தாழிறங்கும் அபாயம்..!!
Next post ஆஸ்திரேலியா அருகே கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை..!!