ஆஸ்திரேலியா அருகே கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை..!!

Read Time:1 Minute, 19 Second

201608121029578757_Australia-near-the-heavy-Earthquake-Tsunami-Warning_SECVPFஆஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு வனுவாட்டுவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பூமி குலுங்கியதால் வீடுகளில் இருந்த மக்கள் வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.

தொடக்கத்தில் 7.6 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 7.2 ரிக்டர் என கணக்கிடப்பட்டது. கடலுக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இது உருவாகி இருந்தது.

இதனால் கடலில் வழக்கத்தை விட மிக உயரமான ராட்சத அலைகள் எழுந்தன, அதை தொடர்ந்து வனுவாட்டு, நியூகளிமோனியா, பிஜு ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

பிஜு தலைநகர் சுவா நகருக்கு விடப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை சிறிது நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. நிலநடுக்கத்தால் வனுவாட்டு நாட்டில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரங்கள் வெளியிடப்பட வில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான புதிய உடன்படிக்கை இன்று கைச்சாத்து..!!
Next post தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்புக்கு 4 பேர் பலி – பலர் காயம்..!!