இங்க பாருடா வெள்ளை நிறத்துல காக்கா, யானையெல்லாம் இருக்குது..!! வீடியோ

Read Time:4 Minute, 13 Second

white_crow_002.w540காக்கா என்றாலே கருமை நிறத்துக்கு உவமைப்படுத்தும் நமது கலாச்சாரத்தில் அதன் நிறத்தால்தான் அதை சனீஷ்வர பகவானின் வாகனமாய் வணங்கிவரும் நிகழ்வுகள் நடக்கிறது. ஆனால் அந்தக்காக்கை இனத்திலேயே வெள்ளை காக்கா என்று ஒன்று இருந்தால்?….!!!

எனது சிறுவயதில் அக்கம் பக்கத்து வீடுகளில் குழந்தைக்கு சோறு ஊட்டும் அம்மாக்கள் பலரும் ‘’அதோ பாரு வெள்ளைக்காக்கா…’’ என்று ஏமாற்றுவதைப் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் வளர்ந்த காலங்களில் கூட யாராவது பொய் சொல்வதை சுட்டிக்காட்ட விரும்பும் நேரத்தில் பலரும் ‘’அதோ பாரு வெள்ளைக்காக்கா…’’ என்ற வார்த்தையை உபயோகிப்பதையும் கவனித்திருக்கிறேன்.

இயற்கையின் அறிவியல் அளப்பரிய தகவல்களைக் கொண்டது என்றாலும்கூட இதுவரையிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் இவ்வுலகில் நிறைந்திருக்கும் இயற்கையின் படைப்புகளில் இருபது விழுக்காடு கூட இருக்காது என்பதும் நிதர்சனமான உண்மைதான்.

அப்படிப்பட்டதொரு அறிவியல் விநோதமாய் இதுவரையிலும் நம்மில் பலரும் பார்த்திராத பல அற்புத உயிரினங்களை பார்த்து ரசித்து தெரிந்துகொள்ளப்போகும் தொகுப்புதான் இந்தப்பதிவு…!

வெள்ளை காக்கா…

முதன் முதலில் நாம் பார்க்கவேண்டியது நம் உலகில் வெள்ளை காக்கா என்று ஒன்று இருக்கிறதா?… இல்லையா?… என்பதை!

முதலில் உலகின் பல பகுதிகளிலும் வெள்ளை காக்கா இருப்பதை உணர்த்தும் இந்தப்படங்களை பாருங்கள். இவை எதுவுமே எந்தவித சாஃப்ட்வேர் ஏமாற்றுவேலையும் இல்லாத ஒரிஜினல் படங்கள்தான்.

இந்த வெள்ளை காக்காவுக்கு அறிவியல் வைத்திருக்கும் பெயர் அல்பினோ பறவை அல்லது அல்பினோ காக்கா…!

வெள்ளை யானை…

தாய்லாந்து, பர்மா, கம்போடியா போன்ற நாடுகளின் வரலாறுகளில் வெள்ளை யானை ஒரு தெய்வ அடையாளமாக பார்க்கப்படும். கதைகள் ஏராளமிருந்தாலும்கூட, நமது இந்திய இதிகாசக்கதைகளிலும் தேவர்களின் தலைவனான இந்திரனிடம் வெள்ளை யானை இருப்பதாக தகவல் உண்டு.

சரி… உண்மையிலேயே வெள்ளை யானை என்று ஒன்று இருக்கிறதா?… புலிகளில்கூட வெள்ளைப்புலி என்று ஒன்று இருப்பதை பலரும் பார்த்திருப்போம். யானையில்?…

யானைகளிலும் வெள்ளை யானை என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் இதுவும் அல்பினிசம் நோயால் நிறம் வெளுத்த யானைகளாகவே அறிவியல் கூறுகிறது. என்னதான் இருந்தாலும் இந்த கருப்பு யானைகளுக்கு நடுவே திடீரென வரும் இந்த வெள்ளை யானைகள் ஒரு அற்புதக்காட்சியாகவே தோன்றுகிறது இந்த வீடியோவில்… ஒருமுறை பார்த்து மெய்சிலிருங்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதலுக்கு இடையூறு: சிறுவனை அடித்துக்கொன்ற தாய்..!!
Next post மோடி உருவப்படத்துடன் ஆடை அணிந்தது ஏன்?: ராக்கி சாவந்த் விளக்கம்..!!